×

புழல் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 640 கன அடியில் இருந்து 396 கன அடியாக சரிவு

சென்னை: புழல் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 640 கன அடியில் இருந்து 396 கன அடியாக சரிந்துள்ளது. புழல் ஏரியில் இருந்து வினாடிக்கு 300 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது. சென்னை குடிநீருக்காக புழல் ஏரியில் இருந்து 159 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சோழவரம் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 800 கன அடியில் இருந்து 750 கன அடி சரிந்துள்ளது. சோழவரம் ஏரியில் இருந்து கொசஸ்தலை ஆற்றுக்கு வினாடிக்கு 1,720 கன அடி உபரி நீர் திறக்கப்படுகிறது.

The post புழல் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 640 கன அடியில் இருந்து 396 கன அடியாக சரிவு appeared first on Dinakaran.

Tags : Turtle Lake ,Chennai ,Bughal Lake ,Dinakaran ,
× RELATED புழல் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 395...